HTML tutorial

கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும்.

மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்காக தெரிவாகியுள்ள 2500 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களது நியமனங்கள், அந்தந்த மாகாணங்களில் வழங்கப்படும்.