கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வளையத்துக்குட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு 5ம் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 16ஆம் திகதி களில் மண் சரிவு ஏற்பட்டு தற்காலிகமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதன் பிறகு மூன்று மாதங்களாக தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 625 மாணவர்களும் அந்தப் பாடசாலையில் கல்வி கற்க முடியாத நிலையில் பகுதிநேர வகுப்பாக தெஹியோவிட்ட சிங்கள தேசிய பாடசாலையில் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
அதன் பிறகு மழை குறைந்த உடன் மீண்டும் மண் சரிவு ஏற்பட்ட தமது பாடசாலைக்கு சென்று கல்வி கற்று வந்தனர் அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிய சிறிய மண் சரிவுகள் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. மீண்டும் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 8 திகதி மற்றும் 2022 ஆம் ஆண்டு 10 மாதம் 27ஆம் திகதிகளில் ஏற்பட்ட மண் சரிவினால் பாடசாலைக்கு விடுமுறை
வழங்கப்பட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டு மண் சரிவுக்கு பிறகு அந்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையில் 2017 ஆம் ஆண்டு தற்போதைய பாடசாலையில் இருந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கல்வி ராஜாங்க அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து ஆட்சி மாற்றத்துக்கு பின் கட்டுமான பணிகள் இடைநடுவே கைவிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பாடசாலை சமூகம் ஏற்படுத்திய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கட்டிட கட்டுமான பணிகள் ஆரம்பித்த போதிலும் தொடர்ந்தும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் அடைந்து நடைபெற்று வருவதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் தகுந்த அதிகாரிகளை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் கடுமலை காரணமாக நேற்று பாடசாலை பிரதான மண்டபத்துக்கு முன்னாள் மண்மேடு சரிந்து விழுந்து இருப்பதினால் பாடசாலை பிரதான மண்டபத்திற்கும் மண் சரி ஏற்படலாம் என பாடசாலை சமூகம் அச்சத்துடன் தமது மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வருவதாகவும் தொடர்ந்தும் கடும் மழை பெய்தால் வருவதால் இங்கு கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் அச்சம் கொள்கின்றனர்.