தாயினால் கை விடப்பட்ட கைக் குழந்தையும் சிறுவனும் பொலிஸில் ஒப்படைப்பு!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட கைக்குழந்தையும் ஒன்பது வயது சிறுவனும் முச்சக்கர வண்டி சாரதியொருவர் மூலமாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அவர்களை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் குறித்த முச்சக்கர வண்டி சாரதி கூறியுள்ளார்.
குழந்தைகளின் தாய் திரும்பி வராததால் குழந்தைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க தான் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு சிசுவை ஆறுதல்படுத்திய நிலையில், குழந்தைகள் கடும் பசியில் இருந்ததாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் கூறியுள்ளனர்.
எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.