HTML tutorial

தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாா் சந்தேகம் வௌியிட்டுள்ளனா்.

சிலாபம் பகுதியை சோ்ந்த 35 வயதுடைய திருமணமாகாத வைத்தியர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.