HTML tutorial

பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்ற செயல்திட்டத்தின் கீழ்
அன்மையிள் கரிட்டாக்ஷனஸ் செட்டிக் நிறுவன மண்டபத்தில்(ஹட்டன்னிள்)
ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் அருட்தந்தை நியூமன் பியூரிஸ் அடிகளார் அவர்களும் ,மௌலவி யாசின் அவர்களும், பெருந்தொட்ட இணைப்பாளர்  நிக்கலஸ் அவர்களும் அரச அரசு சார்பற்ற நிறுவனங்கள் இல் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் இணைந்து இவ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனுடைய பிரதான நோக்கமாக அமைந்திருந்தது எமது இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு வருடங்களை பூர்த்தி செய்கின்ற இந்த சூழ்நிலையிலே மக்களினுடைய கல்வி, பொருளாதாரம் ,சுகாதாரம் ,காணி வீட்டுரிமை கலாச்சாரம் போன்ற தலைப்புகளின் கீழ் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெறுமனே கொண்டாட்டங்களை தவிர்த்து எமது மக்களின் உரிமைக்காக போராடுகின்ற நிகழ்வாகவும் 200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சி செய்து, இறந்து போன எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுகளாக இவை மாற வேண்டும் என்றும் எமது மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்து காணிருமை பெற்றவர்களாகவும்,வீட்டுரிமை பெற்றவர்களாகவும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்ற துணைப் பொருளோடு இந்நிகழ்வு நடைபெற்றது.

கௌசல்யா