HTML tutorial

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான T.V.சென்னன் இசுறுபாய பத்தரமுல்ல கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில்

மேற்படி ஆசிரியர்கள் நியமனத்தில் ஊவா மகாணத்தை சேர்ந்தவர்களுக்கு வெளி மாவட்ட பாடசாலைகளை தெரிவு செய்து அனுப்பி உள்ளார்கள். இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதாவது போக்குவரத்து பிரச்சனைகள் தங்குமிட வசதிகள் குடும்ப சூழ்நிலைகள் போன்றவைகள் இருப்பதனால் வெளிமாவட்டங்களுக்கு சென்று கடமையாற்றுவதில் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே இவர்களை ஊவாமாகாணத்தில் உள்ள அவர்களுடைய பாடவிதானத்திற்கு ஏற்ப பாடசாலைகளை தெரிவு செய்து நியமனங்களை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராமு தனராஜா