மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி பண்டாரவளை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் தியத்தலாவை காஹகல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறு காயங்களுக்கு உள்ளான 5 பாடசாலை மாணவர்களும் பாடசாலை பேருந்தின் சாரதியுமாக ஆறு பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என தியத்தலாவை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முகமாக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா