டி .சந்ரு
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொட்டகலை ஹில்கூல் விடுத்தியில் நேற்று இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் டக்லஸ் நானயகார தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு பிராந்திய ஊடகவியளார்களுக்கான பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.