வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்ட மாணவர்களுக்கான அறநெறி பாடசாலையொன்று நேற்றைய தினம் (18) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
ஊடகவியலாளர் மஹேஸ்வரி விஜயனந்தனின் முயற்சி, உதவியுடன் “சிவன் அருள்” எனப்படும் தொண்டு நிறுவன அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த அறநெறி பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
கேகாலை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள தோட்டப் பகுதிகளில் குறித்த சிவன் அருள் அமைப்பால் இதுவரை 26 அறநெறி அறிவகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் முதலாவதாக மவுண்ட்ஜின் தோட்டத்தில் அறநெறி பாடசாலை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த அமைப்பின் 27ஆவது அறநெறி பாடசாலையாக “அன்பே சிவம் அறநெறி” பாடசாலை விளங்குகின்றது.
இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.