HTML tutorial
மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டி -2023
நு/ தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை பெறுபேறுகள் 2023 (முதலாம், இரண்டாம் ) 07 இடங்களை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.
மத்திய மாகாணத்தில் வகை நான்குக்குறிய (Over 1000 Students) மத்திய மாகாணத்தில் 14 கல்வி வலயங்களுள் 35க்கு மேற்பட்ட பாடசாலைகளுடன் போட்டியிட்டு வகை 4 குறிய பாடசாலைகளில் 21 போட்டியாளர்கள் மத்தியில் 07 இடங்கள் எம் மாணவர்களால் வெற்றியீட்டி எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பெறுபேற்றை பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டிய அதிபர் மற்றும் பிரதி அதிபர் பகுதி தலைவர்கள் அயராது உழைத்த பாட ஆசிரியர்கள், சிறப்புமிக்க மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய வலயக்கல்வி பணிப்பாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர், உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை சமூகம் சார்பாக அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம்.