HTML tutorial

பசறை நிருபர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடந்தோறும் ஏற்பாடு செய்து நடத்தும் தேசிய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டியில் பதுளை மாவட்டம் சார்பாக மாவட்டப் போட்டியில் கலந்து கொண்ட வேவல்ஹின்ன, விரியும் சிறகுகள் மகளிர் கரப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதன்முறையாக  தேசிய ரீதியில் 4ஆம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற வெளியக விளையாட்டரங்களில் இடம்பெற்ற இப்போட்டியில்  லீக் போட்டிகளில் பிரபல கண்டி, குருநாகல் மாவட்ட அணிகளை வெற்றிக் கொண்ட விரியும் சிறகுகள் மகளிர் அணி அரையிறுதிப் போட்டியில் கேகாலை மாவட்ட அணியுடன் மோதி 2-1 என்ற சுற்று  அடிப்படையில் தோல்வியை தழுவியது. 3 ஆவது இடத்திற்காக கொழும்பு மாவட்ட அணியுடன் மோதி 2-1  என்ற சுற்று அடிப்படையில் தோல்வியைத் தழுவி தேசிய ரீதியில் 4ஆம் இடத் தைப் பெற்றுக் கொண்டது.
இவ் அணியில்
சிவகுமார் மகேஷ்,
கனநாதன் லசினியா (அணித் தலைவர் ),
பழனிகுமார் ரஞ்சனி,
 தியாகராஜ் நிரோஷா,
ஜெயராமன் திலக்சனா,
முனியாண்டி தனுஷிகா , செல்வன் சிறிசாந்தி, பொறுப்பாசிரியர் ஜி. மொனீசா ஆகியோருடன் பயிற்றுவிப்பாளரும் , வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய அதிபருமான சுந்தரராஜ் ஆகியோரும் காணப்படுகின்றனர். மலையக பெருந்தோட்ட மகளிர் அணியொன்று குறைந்த வளங்களுடன் 25 மாவட்ட அணிகளுடன் போட்டியிட்டு இவ் அடைவை எட்டியிருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.