விடுபட்டுள்ள உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க கோரி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் எம்.உதயகுமார் ஆகியோர் (05)பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரை சந்தித்து குறித்து மனு அடங்கிய கோரிக்கை கையளித்ததுடன்ஜ 136 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன் வைத்தனர்.
உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் இதற்கு முன்னரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு ஒரு தொகை உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் எஞ்சியிருக்கும் 136 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் கண்டி ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.