கல்வி

21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்றை உருவாக்குவதற்கான காலம் ஏற்பட்டுள்ளது

21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்றை உருவாக்குவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்ற வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மன்ற கல்லூரியினால்நேற்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களை பாராட்டும் வேலைத்திட்ட நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்ற உருவாக்குவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு கட்சி பேதமின்றி கொள்கை ஒன்றை பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றினைந்து முன்னெக்க வேண்டும்;.

வறுமை, அடிப்படை வாதம், பயங்கரவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கல்வி அனைவருக்கும் சமமான முறையில் கிட்டாமையே ஆகும் என்று அவர் கூறினார்.

பாடங்களை மனனம் செய்யும் அடிப்படை பரீட்சை முறைக்கு பதிலாக புதிய பரீட்சை முறையை அமுல்படுத்த வேண்டும் என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button