குரங்கு அம்மை நோயை , உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையாக அறிவித்துள்ளது. 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. 3 ஆயிரத்து 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கும் அது பரவக்கூடும். இதனால் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.