பலாங்கொடை நகரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் தண்ணீர் கலந்த டீசல் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பலாங்கொடையில் பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்தில் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட டீசலில் தண்ணீர் கலந்த உள்ளதாக வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு தொடக்கம் வழங்கப்பட்ட டீசலில் தண்ணீர் கலந்ததுள்ளதோடு வாகனங்கள் இயங்காமல் வீதிகளில் இடையே திருத்தப்பட சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து ioc நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குறித்த எரிபொருள் நிலையத்தில் உள்ள டீசல் மற்றும் வாகனங்களுக்கு செலுத்தப்பட்ட டீசலை பரிசோதனை செய்த போது டீசலில் தண்ணீர் கலந்த இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து மீதி உள்ள டீசலை அகற்றும் பணியில் ioc நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர்.