வத்தளை நகரில் உள்ள வைத்திய பரிசோதனை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த யுவதி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று (15) காலை அப்பெண் பணிபுரியும் வைத்திய பரிசோதனை நிறுவனத்திற்கு அவரது கணவர் வந்து அவருடன் தகராறு செய்துள்ளார்.
பின்னர், தகராறு நீண்டதில், சந்தேகநபரான கணவர் அந்த இடத்தில் இருந்த கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து குறித்த பெண்ணின் கழுத்தில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேகநபரான கணவன் வத்தளை பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.