வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வேலை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பூவரசங்குளம் சந்தி பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று (18 ) காலை இடம்பெற்றது.
வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த தனியார் பேரூந்து தரித்து நின்ற சமயத்தில் பேரூந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்திலிருந்து பேரூந்தின் முன்பக்கமாக வந்த முதியவரொருவர் பேரூந்தில் ஏற முற்பட்ட சமயத்தில் பேரூந்தினை சாரதி செலுத்தியமையினால் பேரூந்தின் சில்லில் சிக்குண்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர்.