அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளை நடத்துவது தொடர்பிலும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (27) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன விசேட அறிவிப்பை வெளியிட்டார். இதற்கமைவாக மேல்மாகாணத்தில் கொழும்பு வலயத்தில் மற்றும் அண்டிய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் பஸ் சேவைகளைப் பயன்படுத்தாமல் பாடசாலைகளை இயக்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.