இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தினால் (SLIDA) ஏற்பாடு செய்யப்பட்ட அரச நிருவாகத்தில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தல் தொடர்பான மாநாட்டில் டிஜிட்டல் ஆட்சிப் பிரிவில் இரண்டாம் இடத்தை நுவரெலிய மாவட்ட செயலகம் வெற்றியீட்டியுள்ளது.
இதன்போது ” மாவட்ட தகவல் கட்டமைப்பு ” மற்றும் “அரசாங்க அதிபரிடம் தெரிவிப்போம்” ஆகிய கட்டமைப்புகளுக்காக மாவட்ட செயலகங்களுக்காக இடம்பெற்ற முன்னளிக்கை சமர்ப்பணத்தின் போது இவ்விருதினை நுவரெலிய மாவட்ட செயலகம் தக்க வைத்துக்கொண்டது.
மாவட்ட செயலாளர் நந்தன கலபட வின் எண்ணக்கருவிற்கு இணங்க தகவல் தொழில்நுட்ப அதிகாரி பி. சத்யா உமேஷினால் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.