யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்ததன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். மத்திய ஆசியாவின் சோவித் யூனியனின் 2 மாநிலங்களுக்கு இவ்வாரம் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தஜிகிஸ்தான், துர்மெனிக்ஸ்தான் ஆகிய நாடுகளுக்கே அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அத்தோடு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவை மொஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் விளாடிமீர் புட்டின் மேற்கொண்டுள்ளார். புட்டின் தஜிகிஸ்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, ஒரு சில முக்கிய சந்திப்புக்களிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.