கொழும்பு-கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்சகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேகம் நேற்று (29) நடைபெற்றது.
சுமார் 4 மாதங்களாக புனர் நிர்மாண பணிகள் இடம் பெற்றதை அடுத்து 28.03.2024 அன்று எண்ணெய் காப்பு இடம்பெற்று 29.03.2024 நேற்றைய தினம் மஹா கும்பாபிஷேக நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் அனைவரும் கலந்து சித்தி விநாயகரின் அருளை பெற்றனர். கும்பாபிஷேக பூஜைகள் இடம் பெற்றதை அடுத்து பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தகது.
டினுஷ்கர் பிரேம்குமார்