ரெஜி ரணதுங்க ஞாபகார்த்தக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் கம்பஹா சியனே தரு விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை மீரிகம அபி விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.
கம்பஹா மாநகரசபைக்குட்பட்ட மடமவத்த சியனே தரு கரப்பந்தாட்ட மைதானத்தின் திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கிண்ண கரப்பந்தாட்ட போட்டி நேற்று (31) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கரப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் சியனே தரு கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
இப் போட்டியின் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான வெற்றிக் கிண்ணப் போட்டிக்கான இறுதிப் போட்டி நீர்கொழும்பு லொயாலா பாடசாலைக்கும் சீதுவ தவிசமர மகா வித்தியாலயத்திற்கும் இடையில் இடம்பெற்றது. சீதுவ தவிசமர அணி சம்பியன் பட்டத்தை வென்றதோடு நீர்கொழும்பு லொயாலா பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
திறந்த ஆண்கள், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் 06 திறந்த ஆண்கள் அணிகள், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் 08 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் 10 என மூன்று நாள் போட்டிகள் இடம்பெற்றன.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டி கிரிந்திவெல சங்கமித்த வித்தியாலயத்திற்கும் மீரிகம கந்தன்கமுவ தேசிய பாடசாலைக்கும் இடையில் இடம்பெற்றது. கிரிந்திவெல சங்கமித்த பாடசாலை மாணவிகள் சம்பியன் பட்டத்தை வென்றனர். பெண்கள் பிரிவில் மீரிகம கந்தங்கமுவ தேசிய பாடசாலை வெற்றி பெற்றது.
இப் போட்டியின் பெண்கள் பிரிவில் சிறந்த பந்து வீச்சு வீராங்கனையாக கிரிந்திவெல சங்கமித்த வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.டி.ஏ.வீரசிங்க, சிறந்த பைட்டராக மீரிகம கந்தன்கமுவ தேசிய பாடசாலையின் டபிள்யூ.பி. சுபானி மெத்சதி, மிகவும் திறமையான வீராங்கனையாக கிரிந்திவெல சங்கமித்த வித்தியாலயத்தின் பி.ஜி.எம். காவ்யா உள்ளிட்ட மூன்று வீராங்கனைகள் விருதுகளை வென்றனர்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக நீர்கொழும்பு லொயாலாபாடசாலையின் திமுத் நிஷானும், சிறந்த பைட்டராக சீதுவை தவிசமர கல்லூரியின் மனுஜ் நிசாலும், சிறந்த வீரராக சீதுவை தவிசமர கல்லூரியின் எச்.தினேஷ் ஹர்ஷ சந்தருவன் விருதுகளை பெற்றனர்.
திறந்த போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக கம்பஹா சியனேதரு விளையாட்டுக் கழகத்தின் ஜினேந்திர சில்வா விருது பெற்றார். சிறந்த பந்து வீச்சாளராக மீரிகம அபி விளையாட்டுக் கழகத்தின் நளீன் ஸ்ரீயந்த, சிறந்த பந்து வீச்சாளராக கம்பஹா சியனேதரு விளையாட்டுக் கழகத்தின் மொரிஸ் சமிந்த பெரேரா, சிறந்த பைட்டராக கம்பஹா சியனேதரு விளையாட்டுக் கழகத்தின் இசுரு மதுஷான், சிறந்த களத்தடுப்பாளராக கம்பஹா சியனே தரு விளையாட்டுக் கழகத்தின் ஆயேஷ் பெரேரா ஆகியோர் தெரிவானார்கள். கம்பஹா சியனேதரு விளையாட்டுக் கழகத்தின் வீராங்கனை அலோக விமுக்தி களத்தடுப்பாளர் விருதை வென்றார்.
முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான விருதை கம்பஹா சியனே தரு விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த தீப்தி ரொமேஷ் பெற்றுக் கொண்டார்.
கம்பஹா மாநகர சபைக்கு உட்பட்ட மடமவத்தை சியனே தரு கரப்பந்தாட்ட விளையாட்டு அரங்கை நவீன உபகரணங்கள் மற்றும் ஏனைய வசதிகளுடன் மீள் அபிவிருத்தி செய்து அதனை அண்மித்த பகுதியை நகர அபிவிருத்தி பூங்காவாக அபிவிருத்தி செய்யும் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், சியனே தரு உள்ளக கரப்பந்தாட்ட அரங்கத்தின் மறு அபிவிருத்தி திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட தொகை 44,348,725.00 ரூபாயாகும். ஆனால் கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த அரங்கின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. சியனே தரு கரப்பந்தாட்டக் கழகம் மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புனரமைப்புப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இதன்படி, பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் இத்திட்டத்தை வெளிப்புற கரப்பந்தாட்ட விளையாட்டுஅரங்கமாக அபிவிருத்தி செய்து மக்களுக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்தது.
இந்த சியனேதரு விளையாட்டுக் கழகம் சுமார் 74 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த விளையாட்டுக் கழகத்தின் ஊடாக இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் இருப்பது விசேடமாகும்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாரச்சி, மேல் மாகாண சபையின் தலைவர் சுனில் விஜேரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சய் மெதவத்த, சியனே தரு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் விமல் கமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முனீரா அபூபக்கர்