காட்மோர் தமிழ் வித்தியாலயம் மாணவன் இறப்பு சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது நீதவான் குறித்த நால்வரையும் எதிர் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்து உள்ளார்.
ஹ ட்டன் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் நேற்று காட்மோர் தமிழ் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயளாலர் கலந்து கொண்டு மாணவன் இறப்புக்கு அதிபருக்கும் பங்கு உண்டு என்பதை வற்புறுத்திய பெற்றோர்கள் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிபரை இடமாற்றம் செய்து பிரதி அதிபரை தற்காலிக அதிபராக நியமித்தனர்.
கொங்கு ரீட் குழாய்கள் பாடசாலை வளாகத்தில் போட பட்ட போது அப்போதைய அதிபர் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காத காரணமாக இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என பெற்றோர்கள் அதிகாரிகளிடம் எடுத்து கூறியதைக் தொடர்ந்து இடமாற்றம் செய்ய பட்ட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் பதில் நீதவான் திருமதி தமயந்தி பெர்னான்டோ மாணவன் படுகாயம் அடைந்த இடத்தை பார்வையிட்ட துnடன் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு சென்று மாணவனின் உடலத்தை பார்வை இட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு இன்று காலை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட்ட பின்னர் உடலம் இறந்த மாணவனின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டது
இச் சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.06.04.2024.