இந்தியா தமிழ் நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் தினத்தில் மலையக மக்கள் தொடர்பில் அயலவர் தமிழர் சார்பில் மலையகத்தை சேர்ந்தவரும் வெளிநாட்டு வாழ் தமிழருமாகிய சுபாஷ் சுந்தரராஜ் கலந்துகொண்டு மலையக மக்களின் தற்கால நிலை தொடர்பில் பேசினார்.
மேலும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றாக பயணிப்பது அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழ்நாடு அரசு இலங்கைக்கு கடந்தகாலங்களில் கப்பல்களில் உளர் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பிவைத்தமைக்கு நன்றிகளையும் பதிவு செய்ததோடு ,இந்தியா அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் தமிழ் நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலை ஒன்றையும் தமிழக அரசுக்கு வழங்க அவர் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.