உலகம்செய்திகள்

225வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அமெரிக்கா : ஹேப்பி பர்த்டே அமெரிக்கா

இன்று ஜூலை 4… ஒவ்வொரு அமெரிக்கரும் மிகவும் உற்சாகமாக கொண்டாடும்

சுதந்திர தினம் கட்சிகள் வேறு வேறு என்றாலும் சுதந்திர தினம் என்று வந்து விட்டால் ‘ஒரே அமெரிக்கன்’ என்ற முழக்கத்தை அனைத்து அமெரிக்கர்களிடமும் காணலாம்.!

1776 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த திகதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் 13 குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது. இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன்14, 1775 இல் பிலடெல்பியாவில் கூடிய கண்ட மாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான இராணுவத்தை அமைத்தது. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட அந்நியப்படுத்த முடியாத உரிமைகள்” அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது.

1776 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த திகதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியல் சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்-1789 ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு அமெரிக்காவில் இதுவரை 3 கோடியே 45 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Celebrative texts for USA Independence Day on American style backdrop, with national flag elements superimposed on wooden surface.

Related Articles

Back to top button