லைக்கா ஞானம் அறக்கட்டளையால் பதுளையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பதுளை வால்டிமார் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.04.2024 அன்று வழங்கி25வைக்கப்பட்டது. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்4715க2ளின் வழிகாட்டலில் பதுளை மாவட்டத்தில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ளும் பாடசாலைகளில் ஒன்றான வால்டிமார் தமிழ் வித்தியாலயத்தின் அவசரத் தேவைகளைக் கண்டறிந்து லைக்கா ஞானம் அறக்கட்டளையானது நிவர்த்தி செய்தது.
இந்நிகழ்வில் வால்டிமார் தமிழ் வித்தியாலயத்தின் 125 மாணவர்களுக்கு அத்தியாவசியமான பாடசாலைப் பைகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. நேரடி பயனாளிகள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிபர், வலயக்கல்வி அலுவலக ஊழியர்கள் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை குழுவின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேவைப்பாடுள்ள மாணவர்களை கண்டறிந்து செயலூக்கமான அணுகுமுறை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பார்வையின் கீழ் கொண்டுவந்ததூடு அறக்கட்டளை உடனடி தேவைப்பாடுகளுக்கான உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்கால கல்விக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.
பாடசாலைப் பைகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற அத்தியாவசியமாக கல்வி கற்றலுக்கு தேவையான பொருட்களை வழங்குவதனை உறுதி செய்வதன் மூலம், லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அப் பகுதியின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்நிகழ்ச்சிதிட்டத்தை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கவும் எதிர்பார்க்கிறது.