அரசியல்செய்திகள்

சானி அபேசேகரவிற்கு வௌிநாட்டு பயணத் தடை ..

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவிற்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த நீதவான் சானி அபேசேகரவிற்கு வௌிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு , சானி அபேசேகரவின் வௌிநாட்டு பயணம் தடையாக அமையும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download