கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், திருப்பழுகாமம் – அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில்
திக்கின்றித் தவித்து நிற்போர் வழிகாட்டும் பெருமாளே
துணையிருந்து வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா
துன்பங்கள் நெருங்காது எமை யென்றும் காப்பதற்கு
திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய்
திக்கெட்டும் அருள்பரப்பி வழிகாட்டும் பெருமாளே
அறிவுதந்து ஆற்றல் தந்து வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா
அச்சங்கள் நெருங்காது எமை யென்றும் காப்பதற்கு
திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய்
திருவருளை நாடிநிற்போர்க்கு அருள் வழங்கும் பெருமாளே
உரிய வழி காட்டியெம்மை வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா
அச்சங்கள் அண்டாது எமை யென்றும் காப்பதற்கு
திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய்
தீமைகளைத் தடுத்தென்றும் துயர் போக்கும் பெருமாளே
தீராத பகை கொடுமை தடுத்து வழிகாட்ட விரைந்து நீ வந்திடைய்யா
அதர்மங்கள் அண்டாது எமை யென்றும் காப்பதற்கு
திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய்
தீராத மனக் கவலை தீர்த்து நலன்கள் தரும் பெருமாளே
திறமையுடன் முன்னேற வழி நடத்த விரைந்து நீ வந்திடைய்யா
வஞ்சனைகள் நெருங்காது எமை யென்றும் காப்பதற்கு
திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய்
திகட்டாத அன்பு தந்து நலன்கள் தரும் பெருமாளே
தித்திக்கும் வாழ்வு தந்து வழிநடத்த விரைந்து நீ வந்திடைய்யா
பாவங்கள் நெருங்காது எமை யென்றும் காப்பதற்கு
திருப்பழுகாமம் கோயில் கொண்ட தூயவனே எழுந்தருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.