வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம் – ஆராச்சிக்கட்டு – இராஜகதழுவ, அருள்மிகு மானாவரி சிவன் திருக்கோயில்
மேற்கிலங்கை கோயில் கொண்டு மேன்மை தரும் சிவனே
மேதினியில் நல்லமைதி நிலவிடவே அருள்வாய்
மேன்மை மிகு சிந்தனையை எமக்கருள வேண்டும்
மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே
இராமபிரான் பூசித்த பெருமை கொண்ட எங்கள் சிவனே
அச்சமில்லா நிம்மதியே நிலவிடவே அருள்வாய்
ஆறுதலைத் தந்தெம்மை ஆட்சி செய்ய வேண்டும்
மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே
இராமலிங்க சுவாமி என்ற பெயர் பூண்ட சிவனே
இவ்வுலகில் அமைதியே உறுதிபெற அருள்வாய்
இன்பம் நிறை வாழ்வு தந்து எமக்கருள வேண்டும்
மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே
இராஜேஸ்வரி அம்பாளை உடன் கொண்ட சிவனே
இந்நாட்டில் எம்முரிமை உறுதிபெற அருள்வாய்
இன்னல் இல்லா வாழ்வு தந்து எமக்கருள வேண்டும்
மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே
புனிதமிகு நற்பதியில் வந்தமர்ந்த சிவனே
பூவுலகில் இயற்கை வளம் உறுதி பெற அருள்வாய்
பெருமைமிகு வாழ்வு தந்து எமக்கருள வேண்டும்
மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே
அழகுமிகு திருக்கோயில் அமர்ந்திருக்கும் சிவனே
அற்புதங்கள் செய்து நம்நிலை உறுதி பெற அருள்வாய்
அஞ்சாத மனவுறுதி மிக்க வாழ்வு தந்து எமக்கருள வேண்டும்
மானாவரி திருக்கோயிலுறை எங்கள் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.