சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.