செய்திகள்

24 மணித்தியாலங்களில் 214 கைது.!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 214 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 49,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button