செய்திகள்

24 மணித்தியாலங்களில் 325 பேர் கைது.!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 325 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 46,549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்துக்குள் நுழைய முயற்சித்த 75 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலேயே உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button