செய்திகள்

24 மணித்தியாலங்களில் 455 பேர் கைது.!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 455 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 45,099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related Articles

Back to top button