சமூகம்

2500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் கடந்த வருடம் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2500 பேருக்கு எதிராக மின்சாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவு ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2,500 பேர் தொடர்பாக தெரியவந்துள்ளது.

இதன்போது, மின்மானியை மாற்றிய 2 ஆயிரத்து 269 பேரும், சட்டவிரோத இணைப்பு மூலம் மின்சாரத்தினை 253 பேரும் பெற்றுள்ளதாக மின்சாரதுறை அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் மின்சார சபையின் 1901 மற்றும் 1987 எனும் இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button