நானுஓயா நிருபர்
இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நானுஓயா டெஸ்போட் வழியாக சுற்று வீதியினை பயன்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறு மீறி செயற்படும் சாரதிகளுக்கு சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ,இதுவரை நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதிகமாக கனரக வாகனங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் அதிகமான உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மிகவும் சரிவான இவ் வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
இதன் போது உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்