செய்திகள்மலையகம்

“26 கிலோ கொழுந்து பறிக்குமாறு கட்டளையிடும் தோட்ட நிர்வாகம்”

‘1,000 ரூபாய் சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுகின்றது. அதுமட்டுமல்ல வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்முடியாது. எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.’ என வலியுறுத்தி மஸ்கெலியா, லங்கா தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நாட் சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஒரு மாதம் மட்டுமே ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அதன்பின்னர் உரிய வகையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் லங்கா தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், தொழில் அமைச்சும் தலையீட்டு தமக்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.

Related Articles

Back to top button