வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், அராலி, செட்டியார்மடம் மண்டையன்திடல் அருள்மிகு வீரகத்தி விநாயகர் திருக்கோயில்
வேதனைகள் களைந்து, உடல் நலமும், உளநலமும் காத்தருளும் விநாயகரே
உற்றதுணை நீயிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய்
செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
நம்பிக்கை தந்தருளும் தும்பிக்கை உடன் கொண்டு காத்தருளும் விநாயகரே
என்றும் உடன் நீயிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய்
செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
வழித்துணையாய் இருந்தெமக்கு வழிகாட்டிக் காத்தருளும் விநாயகரே
வளங்கள் தந்து அருகிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய்
செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
நிம்மதியைத் தந்தெமக்கு ஆறுதலைத் தந்தருளும் விநாயகரே
துணையாக அருகிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய்
செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
கேட்ட வரம் தந்தெமக்கு நலன் வழங்கும் விநாயகரே
தொல்லையில்லா வாழ்வு தந்து எமைக்காக்க வேண்டுமப்பா
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய்
செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே
எங்கும் நிறைந்திருந்து அருள் பொழியும் விநாயகரே
ஏற்றமிகு வாழ்வு தந்து எமைக்காக்க வேண்டுமப்பா
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய்
செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.