நுவரெலியா பிராந்திய சுகாதார பணிமனை பிரிவுக்குட்பட் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியத்துக்கு பின்புறத்தில் பாரிய மண்மேட்டில் இருந்து கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால். இங்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
தற்போது கட்டிடத் தொகுதியும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது . அதே வேளை தொடர்ச்சியாக இங்கு பொது மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் 2010 ஆம் ஆண்டு இயற்கை அணர்த்த மத்திய நிலையத்தில் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இதுவரை இந்த வைத்தியசாலை பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்தாத காரணத்தினால். இங்கு வரும் நோயாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரி மக்கள் இன்று காலை 10, மணி முதல் 11.30 மணி வரை குழந்தைகளை வைத்துக்கொண்டு100 இற்கு மேற்பட்டவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மண் சரிவு அபாயம் காரணமாக தொடர்ந்து நாம் உயிர் அச்சங் களோடு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததோடு சம்பந்தப்பட்ட நபர்கள் விடையம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு தமது உயிரை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கௌசல்யா.