நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தில் லயன் அரை ஒன்றில் தீ ஏற்பட்டு முற்றாக சேதமடைந்த நிலையில் நீண்ட காலமாக வசிப்பிடமின்றி தற்காலிக கூடாரங்களில் வசித்து வரும் 12 கும்பங்களுக்கு இன்று அரிசி பொதிகள் பொன்மணி அறக்கட்டளையின் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் பொன்மணி அறக்கட்டளையின் மூலம் இவ்வாரான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிழ்வில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள பொன்மணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு முத்துகுமார் அவர்களும் கெயார் லங்கா அறக்கட்டளையின் ஸ்தாபகர் மற்றும் பணிப்பாளர் திருமதி அர்ச்சுனி மற்றும் இணைப்பாளர் திரு கணேசன் இளையராஜா, திரு கவியுகன் பிரசாந் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.