நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு (25) புதன்கிழமை மாலை நுவரெலியாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நுவரெலியா பிரதான நகரில் பேல் பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கிளையில் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வெற்றிக் கொண்டாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வருகை தந்த பொதுமக்களுக்கு பால் சோறும் இனிப்பு பண்டங்களும் வழங்கி தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள தொடர்ந்து உள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி
கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் , ஆதரவாளர்கள், மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.