கடந்த முதலாம் தேதி முதல் தோட்ட நிர்வாகத்தினரால் மூடப்பட்ட லுணுகலை சோலன்ஸ் தோட்ட தொழிற்சாலை தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் தொழிற்சாலை திறக்க கோரி தொழிலாளர்கள் கடந்த 25ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர்
நிர்வாகத்தினரால் இன்று காலை குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டது.
இதன்போது தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.