பதுளை – கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து, இன்று திங்கட்கிழமை பெரகல வியாரகல வீதியில் பயணிக்கையில் பேருந்தின் பிரேக் பிடிக்க முடியாமல் போயுள்ள நிலையில் பேருந்தின் சாரதி பேருந்தை வீதியோரம் இருந்த கானிற்குள் சரித்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
ராமு தனராஜா