லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ரோட் அடாவத்தைப் பகுதியில் இருந்து மூன்று நபர்களும் லுணுகலை அடாவத்தைப் பகுதியைச் சேர்ந்த இருவருமாக ஐவர் பிட்டமாறுவ (தொரபொத்த) சிறிய உலக முடிவு பகுதிக்கு மாணிக்கக் கல் அகழ்விற்காக கடந்த 26 ம் திகதி சென்றுள்ளனர்.
S சுவர்ணராஜா எனும் நபர் நேற்றைய தினம் (30/01) வீடு வந்து விட்டதாக அவருடன் சென்ற ஏனைய நாலவரும் சுவர்ண ராஜாவின் உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து , சுவர்ணராஜா இன்றுவரை வீடு திரும்பாததால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தனர்.
இதன்போது எல்ரோட் பகுதியைச் சேர்ந்த இருவரையும் லுணுகலை 27 ம் கட்டையைச் சேர்ந்த இருவரையும் லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணாமல் போன நபரைத் தேடும் பணிகளில் லுணுகலை பொலிஸாரும் ஊர் மக்களும் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா