லங்கா சதொச நிறுவனம் ,இன்று (02) முதல் அமுலுக்குவரும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு அரிசி, கோதுமை மா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை ஆயிரத்து 675 ரூபாவாகும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 165 ரூபாவாகும்.
இது 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு அரிசி 10 ரூபாவாலும், கோதுமை மா 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி சிவப்பு அரிசி ஒரு கிலோவின் புதிய விலை 169 ரூபாவாகும். கோதுமை மா ஒரு கிலோ 230 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.