செய்திகள்

3 கோடி தங்க ஆபரணங்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த 14 பேர் கைது.

சட்டவிரோதமாக ஒரு தொகை தங்கத்திலான பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த 14 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைத்தந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் ஆடைக்குள் மறைத்து 4 கிலோ 700 கிராம் தங்க ஆபரணங்களை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றபட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி 3 கோடியே 19 இலட்சத்து 75 ஆயிரம் என சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

30 தொடக்கம் 50 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன். அவர்கள் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் எனவும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

Related Articles

Back to top button
image download