...
செய்திகள்

3 மாவட்டங்களில் அடுத்தடுத்து எரிவாயு வெடிப்பு சம்பவம்

மட்டக்களப்பு, காலி மற்றும் தலவாக்கலை பிரதேசங்களில் இன்று(01) அடுத்தடுத்து எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின! 

01. மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் தேனிர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

No photo description available.

02. தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோக்கர்ஸ் பகுதி மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

May be an image of 3 people and indoor

.

03. காலி-உடுகமை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை (01) எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் வீட்டில் இருந்த எந்தெவொரு நபருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்

Related Articles

Back to top button


Thubinail image
Screen