உலகம்

3 வருட பயணத்தடையை சவூதி அரேபியா!

தமது நாட்டினால் பயணத்தடை விதித்து சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணிப்போருக்கு 3 வருட பயணத்தடையை சவூதி அரேபியா விதிக்க உள்ளது.

கொரோனா மற்றும் அதன் பிறழ்வுகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்,ஆர்ஜன்டீனா,பிரேஸில்,எகிப்து,எதியோப்பியா,இந்தியா,இந்தோனேஷியா லெபனான்,பாகிஸ்தான்,தென்னாபிரிக்கா,துருக்கி,வியட்னாம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சவூதி பயணத்தடையை விதித்துள்ளதுடன் இடைமாற்று பயணங்களையும் தடை செய்துள்ளது.

வளைகுடா நாடுகளில் 30 மில்லியன் சனத்தொகையை கொண்ட நாடாக உள்ள சவூதியில் செவ்வாய் இன்றைய தினம் 1379 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.எனவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 520774 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8189 ஆக பதிவாகியுள்ளது.

Related Articles

Back to top button