செய்திகள்

30 வயதுக்கும் குறைந்த ஆண் கொரோனாவுக்கு பலி : மேலும் 1,737 கொரோனா தொற்றாளர்கள்.!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றுமுன்தினம் (01/07) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரை 3,157 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

25 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கு கீழ் ஒரு ஆணும், 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 3 பெண்களும், 5 ஆண்களும் மரணித்தனர். 60 வயதிற்கு மேற்பட்ட 9 பெண்களும், 19 ஆண்களும் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் இதுவரை ஆயிரத்து 737 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 62 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 29 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button