காலநிலைசெய்திகள்

300 மில்லிமீட்டருக்கும் அதிக கடும் மழை வீழ்ச்சி : இங்கிரிய, ஹொரணை பகுதிகளில்

இன்று காலை 5.30 உடன் நிறைவடைந்த 21 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி இங்கிரிய பகுதியிலேயே பதிவாகியுள்ளது. அங்கு 311 தசம் 5 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹொரணையில் 289 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மினுவங்கொட பகுதியில் 179 தசம் 5 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இன்றும் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பலத்த மழை களுகங்கையின் இங்கிரிய, ஹொரனை, மதுராவல, மில்லனிய, அகலவத்தை, பாலிந்தநுவர பகுதிகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com