பதுளை மாப்பாகலை பகுதியில் மாப்பாகலை தோட்டத்தில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பதுளை பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த வேளையிலேயே நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் பிரேதம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை கிடைத்த பின்பே இறந்தமைக்கான காரணம் கண்டறியப்படும் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.